×

கோர்ட்டில் தவறான தகவல் கொடுத்ததாக புகார் பெண் இன்ஸ்பெக்டர் பதில் தர ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வரதட்சணை கொடுமை புகார் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை கொடுத்த விவகாரத்தில் பெண் இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் ேநரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ரஜினி ஸ்ரீ (30). இவர், கடந்தாண்டு ஜூலை 8ம் தேதி, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தனது கணவர் அருண்குமார் மீது வரதட்சணை புகார் அளித்தார். இந்த புகார் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால், புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ரஜினி ஸ்ரீ வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, 15வது மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் முரளிகிருஷ்ணா ஆனந்தன் முன் விசாரணைக்கு வந்தபோது, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி, புகார் மீது  விசாரணை செய்து ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்  அசோக்குமார், போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தவறான தகவல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று வாதிட்டார். இதை ஏற்ற மாஜிஸ்திரேட், சம்மந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். இந்நிலையில், வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராகி இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தார். இதை ஏற்ற மாஜிஸ்திரேட், விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

Tags : Georgetown , Georgetown court orders female inspector to respond to complaint of misrepresentation in court
× RELATED சென்னை ஜார்ஜ் டவுன் ராஜாஜி சாலையில் 150...